நான் அழகின் ரசிகன்,
ஆனால், அசிங்கங்களை எல்லாம்
என் மீது பூசிக்கொண்டவன்;
நான் உயரங்களை
குறிக்கோள்களாக கொண்டவன்
தாழ்வுகளில்
தத்தளித்துக்கொண்டிருப்பவன்
எல்லோருக்கும் நண்பனாக இருக்க விரும்புகிறவன்.
ஆனால், எனக்கு நானே நண்பனாக இல்லை.
புண்களை தந்தவர்களுக்கும்
பூச்செண்டுகள் தர விரும்புகிறவன்
தன் காயங்களை கவிதைகளாக
மொழிபெயர்க்கின்றவன்
ஒரு நாள் பூமியை நான் வெல்வேன்
அல்லது பூமி என்னை தின்றிருக்கும்