மஞ்சள் வெயில் மாலை பொழுது,
எதிர் வர கண்டு புன்னகைத்த போதும்,
கருத்த வானம் திடீரென மழை பொழிய
தெருவோர கடையின் கீழ் தஞசம்
அடைந்த போதும்;
பசுமை மரங்கள் அடர்ந்த
தனிமை சாலையில் ஒன்றாக
நடை பயின்ற போதும்;
நீல வானில் அமிழ்ந்து மாடியில் அமர்ந்திருக்க
இரவல் வாங்கிய புத்தகத்தை நீ
திரும்ப தர வந்தபோதும்;
பச்சை கிளியாய் உன் பெயரை மனம் உச்சரிக்க
தனியாக நூலக அறையில் படித்துக்கொண்டிருந்தபொழுது
எதிரே வந்து நீ அமர்ந்த போதும்;
சொல்லிவிடத்தான் துடித்தேன்;
ஏனோ வார்த்தைகளின்
வாயோரம் வழிந்தது
மௌனம்....
No comments:
Post a Comment