bluehost

Monday, June 20, 2011

விடுபடும் வழி

ஒரு ஜென் துறவி. தியானத்தில் அமர்ந்திருந்தார்.

அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் குருவை அணுகினான். ’ஒரு சந்தேகம்’ என்றான்.

‘என்ன சந்தேகம்?’

‘தினமும் எழுகிறோம், தியானம் செய்கிறோம், சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், இந்தச் சங்கிலியில் இருந்து விடுபட வழியே கிடையாதா?’

‘உண்டே!’

‘என்ன வழி?’

‘எழவேண்டும், தியானம் செய்யவேண்டும், சாப்பிடவேண்டும், தூங்கவேண்டும், அவ்வளவுதான்!’

‘என்ன குருவே சொல்கிறீர்கள், ஒன்றும் புரியவில்லையே!’

‘புரியாவிட்டால், தினமும் எழுந்திரு, தியானம் செய், சாப்பிடு, தூங்கு’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் துறவி.

வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் , விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும் என்பது இதன் மைய கருத்து.

No comments: