bluehost

Monday, March 23, 2020

கொரானாப் பற்றிய பதற்றத்தை தணிப்பது எப்படி?

கொரானாவை விட அதைப்பற்றிய அச்சமும், கவலையும் அதிவேகமாக
பரவி வருகிறது. "கொரானாவிலிருந்து, நம்மளை எப்படி தற்காத்துக் கொள்வது?"
என்று நமக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. நாம் நம்மை தற்காத்துக்
கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். அதேசமயத்தில், கொரானாவைப் பற்றிய
அச்சமும் பீதியும், நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல், பார்த்துக்கொள்ள
வேண்டும்.


ஆபத்தைக் கண்டு அஞ்சுவது இயல்பான ஒன்று. அது நம்மை பாதுகாத்துக்
கொள்ள உதவும். ஆனால் அச்சமே நம்மை கொல்வதற்கு அனுமதிக்கக் கூடாது.


கொரானாவைப் பற்றிய பதற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள
கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்:


தொலைக்காட்சியை அணைத்து விடுங்கள்

சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருங்கள்

வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட தேசிய சுகாதார வலைத்தளங்களில்
வெளியாகும் தகவல்களை பாருங்கள். சமூக ஊடகங்களில் வரும் செய்திகள்
பலவும் போலியானவையே. அவை உங்களுடைய பதற்றத்தை மேலும்
அதிகரிக்கவே செய்யும்.

சமூகத்தில் இருந்து தனித்து இருங்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன்
உரையாடுங்கள். தொலைவிலுள்ள நண்பர்களுடனும் உறவினர்களுடனும்
காணொளியில் உரையாடுங்கள். தனிமையைத் தவிருங்கள்.

உங்களுடைய அன்றாட அலுவல்களை எப்போதும் போல் இயல்பாக செய்யுங்கள்

முடிந்தவரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றியும், பதற்றம் குறையவில்லை எனில்
நீங்கள் பொது மருத்துவரையோ அல்லது மனநல மருத்துவரை அணுகுங்கள்.


சமூக ஆர்வலர் 
சு.இரவிச்சந்திரன்

இங்கிலாந்திலுள்ள பாத் பல்கலைக்கழகத்தில், உளவியலில் மூத்த விரிவுரையாளர்
ஆக பணி புரியும் ஜோ தானியல்ஸ் எழுதிய கட்டுரையை அடிப்படையாக கொண்டு
எழுதப்பட்டது.


தொடர்புடைய சுட்டி:

https://www.google.com/amp/s/theconversation.com/amp/coronavirus-how-to-stop-the-anxiety-
spiralling-out-of-control-133166

No comments: