bluehost

Monday, November 24, 2008

சத்குருவே சரணம்.

சத்குருவுக்கு சமர்ப்பணம் 


கண்கள் மூடி அமைதியாய்
அமர்ந்து இருப்பதுதான்
தியானமா?
இல்லை 
உயிர்ப்புடன் இருப்பதுதான்
தியானம் என உணர வைத்தாய்;
மரத்தடியில் அமர்ந்து
ஞானத்தை போதிப்பவனா நீ? 
இல்லை 
மக்களிடம் சென்று அவர்கள்
துயர் துடைப்பவன்.
மனித வாழ்க்கையே 
துன்பமா? சாபமா? 
ஆனால் எங்கள் வாழ்க்கையில் 
மகிழ்ச்சி மலரவைதாய்! 
மனம் பாசி படர்ந்து 
நீருக்குள் கிடக்கும் 
பாறையாய் இருந்தது;
இப்பொழுது பாடும் 
வானம்பாடியாய் ஆனது! 
தியானலிங்கம் படைக்க
பிறவிகள் பல கடந்து வந்தாய்;
உன்னை காண பிறவிகள் 
பல கடந்து நாங்கள் வந்தோம்;
ஈஷாவின் சூரியனே!
சத்குருவே சரணம்.

ஈஷா அமைப்பின் த‌லைவ‌ர் ச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவ் ப‌ற்றிய‌ க‌விதை. ஈஷாஅமைப்பை ப‌ற்றி மேலும் அறிய‌ www.ishafoundation.org

No comments: