bluehost

Wednesday, November 26, 2008

என் பெய‌ர் எஸ்கோப‌ர் - பா.ராக‌வ‌ன்

என் பெய‌ர் எஸ்கோப‌ர்‍ - ‍ பா.ராக‌வ‌ன்
எஸ்கோப‌ர்‍ என்ற‌ கொகெய்ன் க‌ட‌த்த‌ல் ம‌ன்ன‌னைப் ப‌ற்றிய‌ புத்தக‌ம்.‍கார் திருட‌னாக‌ அறிமுக‌மாகும், பாப்லோ எமிலியோ எஸ்கோப‌ர், போதை ம‌ருந்து கும்ப‌லில் அடியாளாக‌ சேர்ந்து, ப‌டி,ப‌டியாக‌ வ‌ள‌ர்ந்து,அத‌ன் த‌லைவ‌னாக‌ மாறி, மெட‌லனின் கார்ட‌ல் என்ற‌ ஒரு பெரிய‌ போதை சாம்ராஜ்ய‌த்தை உருவாக்குகிறான். ந‌ம்ம‌ ஊர் 'தாதா'க‌ள் ஒர‌ள‌வு வ‌ள‌ர்ந்த‌வுட‌ன் அர‌சிய‌லில் தஞ்ச‌ம் அடைவ‌து போன்று, எஸ்கோப‌ரும் கொலம்பிய‌ லிப‌ர‌ல் க‌ட்சியில் சேர்ந்து எம்.பி. ஆகிறான்.த‌ன் தொழிலுக்கு உட‌ன் ப‌டாத‌வ‌ர்க‌ளை ப‌ண‌த்தால் வாங்கிவிடுவ‌து அல்ல‌து கொன்றுவிடுவ‌து; இதுவே அவ‌ன் போதை சாம்ராஜ்ய‌த்தை விரிவாக்கும் வ‌ழியாக‌ இருக்கிற‌து. அவ‌னுக்கு போட்டியாக‌, ஆள் க‌ட‌த்தும் கும்ப‌லை சேர்ந்த‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ளுக்கு கிடைத்த‌ பெரும் பிணைத்தொகையை முத‌லீடாக‌ வைத்து 'காலி கார்ட்ட‌ல்' என்ற‌ போதை கூட்ட‌மைப்பை தொட‌ங்குகின்றன‌ர். அவ‌ர்க‌ள் 'மரிஜ்ஜுவ‌னா' என்ற‌ போதை ம‌ருந்தை ப‌யிரிட்டு,க‌ட‌த்துகின்ற்ன‌ர். போட்டி முற்றுகிற‌து. 

எம்19- என்ற‌ தீவிர‌வாத‌ குழுவுக்கு, எஸ்கோப‌ர் ப‌ண‌ உத‌வி செய்கிறான். த‌ன் எதிரிக‌ளை அழிக்க‌ எம்19யை க‌ருவியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான். 06.11.85 அன்று எஸ்கோப‌ரின் தூண்டுத‌லால்,எம்19 கொலம்பிய‌ நீதித்துறை க‌ட்டிட‌த்தின் மீது பெரும் தாக்குத‌ல் ந‌ட‌த்தி, நீதிப‌திக‌ள் ப‌ல‌ரை பிணை கைதியாக‌ பிடித்து, பிற‌கு கொல்கிற‌து. கொலம்பிய‌ அதிப‌ர் ப‌யணிக்க‌யிருக்கும் போயிங் 107 விமான‌த்தை குண்டு வைத்து த‌க‌ர்த்த‌ல். அதிப‌ர் அதில் பய‌ண‌ம் செய்யாத‌தால், உயிர் த‌ப்பிக்கின்றார். அத‌ன் பிற‌கு 'டாஸ்' என்கிற‌ அமைப்பின் மீது தாக்குத‌ல். போலிஸ் பிடி இறுகிய‌வுட‌ன்,சில‌ நிப‌ந்த‌னைக‌ளுட‌ன் அர‌சிட‌ம் ச‌ர‌ண‌டைகிறான். 

அவ‌னின் போதை ம‌ருந்து தொழிலும், ச‌மூக‌ விரோத‌ செய‌ல்க‌ளும் குறையும் என்ற‌ ந‌ம்பிக்கையில், அர‌சும் ஒப்புக்கொள்கிற‌து. லே க‌தீட்ர‌ல் என்ற‌ சிறையில்(மாளிகையில்) காவ‌ல்துறைக்கு ல‌ஞ்ச‌ம் கொடுத்து,அவ‌ர்க‌ள் உத‌வியுட‌ன் ஒன்ற‌ரை வ‌ருட‌ம் ராஜ‌வாழ்க்கை வாழ்க்கிறான். அவ‌ன் உள்ளே இருந்தாலும்,அவ‌னின் போதை ம‌ருந்து தொழிலும், அட்டூழிய‌ங்க‌ளும் த‌டையின்றி ந‌டைப்பெறுகிற‌து.அத‌னால் அர‌சு அவ‌னை சிறையிலேயே கொல்ல‌ திட்ட‌மிடுகிற‌து. அ‌து தெரிந்து,சிறையிலிருந்து த‌ப்பிக்கின்றான். அமெரிக்க‌ உதவியுட‌ன், கொல‌ம்பிய‌ அர‌சு எஸ்கோருக்கெதிரான‌ யுத்த‌தை தொட‌ங்குகிற‌து. முத‌லில், அவ‌னுடைய‌ போதை க‌ட‌த்தல் நெட் ஒர்க்கை அழிக்கிற‌து. பிற‌கு அமெரிக்க தொழிட் நுட்ப‌ உத‌வியுட‌ன் அவ‌னை க‌ண்டுப்பிடித்து, கொல்கிற‌து.

புத்தக‌த்தை முடித்த‌வுட‌ன், ஒரு போதை ம‌ருந்து க‌ட‌த்தும் mafiaவின் திரைப்ப‌ட‌த்தை பார்த்த‌ உண‌ர்வு ஏற்ப‌டுகிற‌து. பா.ராக‌வ‌னின் எழுத்து ந‌ம்மை கைப்பிடித்து கொல‌ம்பிய‌ ம‌லைப்ப‌குதிக‌ளுக்கும், கொகெய்ன் தொட்ட‌ங்க‌ளுக்கும், நீண்ட‌ க‌ட‌ற்க‌ரைக‌ளின் உப்பு ம‌ண‌ற்ப‌ர‌ப்பிலும் அழைத்து செல்லுகிற‌து. 90க‌ளில் அமெரிக்கா, கொல‌ம்பிய‌ போதை ம‌ருந்து க‌ட‌த்தும் கும்ப‌ல்க‌ளுக்கெதிராக‌ தொட‌ங்கிய‌ யுத்த‌ம் Cocaine War என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து.அத‌ன் சில‌ ப‌ரிமாண‌ங்க‌ள் இப்புத்தக‌த்தில் வெளிப்ப‌டுகின்ற‌ன‌. 

கொல‌ம்பிய‌ நாட்டில் நில‌விய‌ அர‌சிய‌ல் சூழ்நிலைக‌ள்;அமெரிக்கா‍-சோவிய‌த் இடையே நில‌விய‌ ப‌னிப்போரால் உருவாகிய‌ தீவிர‌வாத‌ குழுக்க‌ள்;அமெரிக்க த‌லையீடு; பொருளாதார‌ சீர‌ழிவு; விவாசாய‌ நில‌ங்க‌ள் கொகெய்ன் தொட்ட‌ங்க‌ளாக‌ மாறிய‌து; அத‌னால் போதை ம‌ருந்து க‌ட‌த்தும் த‌ள‌மாக‌ கொல‌ம்பியா மாறிய‌து; அத‌ன் விளைவாக‌ எஸ்கோப‌ர் தோன்றிய‌து; போதை ம‌ருந்து சாம்ராஜ்ய‌ம் உருவாகிய‌து ‍ போன்ற‌ த‌க‌வ‌ல்க‌ளை இப்புத்தக‌த்தின் மூல‌ம் அறியலாம். (அமெரிக்கா இது போன்ற‌ செய‌ல்க‌ளில் ஈடுப்ப‌டுவ‌த‌ற்க்கான‌ கார‌ண‌ங்க‌ளை பா.ராக‌வ‌னின் "டால‌ர் தேச‌ம்"ல் காண‌லாம்). இப்புத்தக‌ம் ஒரு க்ரைம் நாவ‌லுக்குரிய‌ தொட‌க்க‌த்துட‌ன் ஆர‌ம்பித்து, அதே ப‌ர‌ப‌ர‌ப்புட‌ன், சுவார‌ஸ்ய‌மாக‌ க‌டைசிவ‌ரை நீள்கிற‌து.

இப்புத்தக‌த்தின் மூல‌ம் அறியப்படும் சில‌ உண்மைக‌ள்
1. போதை ம‌ருந்து க‌ட‌த்தலும்,தீவிர‌வாத‌மும் உல‌கெங்கும் ஒன்றாக‌ செய‌ல்ப‌டுவ‌து
2. தீவிர‌வாத‌ம் வேரூன்றும் இட‌ங்க‌ளில்,போதை ம‌ருந்து ப‌யிரிடுவ‌தும் ந‌டைபெறுகிற்து.
3. அர‌சு&காவ‌ல் துறைக‌ளில் விர‌வியிருக்கும் கையூட்டு.

சில‌ குறைக‌ள்
1. முத‌ல் அத்தியாய‌த்தில் வ‌ரும் க‌ர்ன‌ல் ஆல்ப‌ர்ட்டோ பொரீரோ, யார் என்று விள‌க்க‌ப்ப‌ட‌வில்லை (ப‌க் 12)

2.AUC - ப‌ற்றி எதும் சொல்ல்ப்ப‌ட‌வில்லை.

3.சில‌ எழுத்து பிழைக‌ள்
ப‌க் 17, 22ம் வ‌ரி புர‌ட்சியாமிர்க‌ள்
ப‌க் 17, 34ம் வ‌ரி அடையாமிம்
ப‌க் 205, 34ம் வ‌ரி பெரும்போது

4.பா.ராக‌வ‌னின் எளிமையான‌ எழுத்து ந‌டை, ஒரு பெரிய‌ ப‌ல‌மாக‌ இருந்தாலும், ப‌ல‌ இட‌ங்க‌ளில் அதுவே ப‌ல‌வீன‌மாக‌ ஆகிவிடுகிற‌து.அது சொல்ல‌ வ‌ரும் விஷ‌ய‌த்தை ம‌லிவுப்ப‌டுத்திவிடுகிற‌து.


No comments: