bluehost

Friday, February 28, 2020

வன்முறையின் நிறம்

தீவிர‌வாத‌த்தின் நிறம்
காவியா?
ப‌ச்சையா?
தெரிய‌வில்லை.
ஆனால்,
அப்பாவி மக்க‌ள்
சிந்தும் இர‌த்த‌த்தின்
நிறம்
சிவ‌ப்பு!!!
WEDNESDAY, DECEMBER 3, 2008
இந்த கவிதையை(கவிதையா எனத் தெரியவில்லை) 12 ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய வலைப்பூவில், எழுதியிருக்கிறேன். ஆனால், அது தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவது வேதனையளிக்கிறது.
அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்றவற்றின் பெரும் வளர்ச்சி, மனித இனத்தை உயர்த்தும் என நினைத்தேன். ஆனால், சக மனிதனை ஜாதி, மதம், இனம் மற்றும் மொழியின் பெயரால் கொல்லும் இழிவு இன்றும் தொடர்கிறது. நம்மை நாகரீகம் வளர்ந்த சமுதாயம் என சொல்லிக் கொள்வது வெட்கக்கேடு.
அமைதியான மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடும் இளைஞனின் படத்தை பார்த்தேன். இந்தி திரைப்பட கதாநாயகனை மிஞ்சிய வசீகரமானத் தோற்றம். அவன் கொலை செய்தான் என்று யாராவது சொன்னால் - சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். அவ்விளைஞனின் மனதில் நஞ்சை கலந்தது யார்? சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தீவிரவாதத்திற்கு வறுமை, போதிய கல்வியறிவின்மை போன்ற காரணிகள் இருந்தன. ஆனால், இன்று நன்கு படித்த, பணக்கார இளைஞர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். காரணம்,
சமூக வலைதளங்கள் உட்பட எங்கும், நரகலாய் வழியும் "வெறுப்பு பிரச்சாரம்". நன்கு படித்து உயர் பதவிகளில் இருப்பவர்களின் மனங்களில் கூட, இந்த மனநிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையையும் அடைந்தேன்.
இன்று, மக்களை வழிநடத்த காந்தி இல்லை. ஆனால், கோட்சேக்கள் நிறைய இருக்கின்றனர்.
சமூக ஆர்வலர்
சு.இரவிச்சந்திரன்

No comments: