Friday, January 23, 2009
வரலாற்றில் இன்று - ஜனவரி 23
- 1368 - சூ யுவான்ஷாங் சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.
- 1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.
- 1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- 1937 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின்மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரிட்டன் கைப்பற்றியது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் ஜப்பானியப்படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் ஜப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
- 1950 - இஸ்ரேலின் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.
- 1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
- 1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.
- 1996 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.
- 1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம்விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.
Thursday, January 22, 2009
வரலாற்றில் இன்று - ஜனவரி 22
- 1984 - ஆப்பிள் மெக்கின்டோஷ் (mac) கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.
- 1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
- 2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
- 2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்
- 1788 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (இ. 1824)
- 1901 - விக்டோரியா, பிரிட்டிஷ் (பி. 1819)
வரலாற்றில் இன்று - ஜனவரி21
- 1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
- 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில்வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
- 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
- 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
2009 - உலக வானியல் ஆண்டு - வெங்கட்
2003 ஆம் ஆண்டு உலக வானியலாளர் மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. அந்த மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 2005-ஆம் ஆண்டு உலக வானியல் ஒருங்கமைப்பும் (International Astronomical Union) யுனெஸ்கோ (UNESCO) இந்த ஆண்டினை உலக வானியல் ஆண்டாக அறிவித்திருக்கிறது. (உங்களில் பலருக்கு 2005 ஆம் ஆண்டு உலக இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது நினைவிருக்கலாம்).
வானியல் ஆண்டு? ஏன்?
2009 ஆம் ஆண்டு வானியல் ஆண்டாகக் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கம் சராசரிப் பொதுமக்களுக்கு வானத்தைக் கூர்ந்து நோக்கி இந்தப் பேரண்டத்தில் தம் இருப்பிடத்தை அறிய உதவுவதும், அதன் மூலம் கண்டுபிடித்தலின் அடிப்படை ஆனந்ததையும் ஆச்சரிய அனுபவத்தையும் துய்க்க உதவுவதும் ஆகும். வானியல் ஆய்வுகள் சராசரி மக்களின் அன்றாட வாழ்வில் செலுத்தும் பங்கை அறியத் தருவதும் இதன் நோக்கமாகும். அடிப்படை அறிவியல் தேட்டம் நம் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் விதத்தையும் அதன் துணைகொண்டு அமைதி நிறைந்த, சமச்சீர் உலகை அடையும் உன்னத நோக்கத்தையும் மறுவலியுறுத்த இந்த ஆண்டிற்கான கொண்டாட்டங்கள் உதவும் என்று நம்பலாம்.
2009-ஆம் ஆண்டு முழுவதும் உலகின் அனைத்து நாடுகளிலும் வானியல் சார்ந்த கொண்டாட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இந்த கொண்டாட்டங்களை முன்னின்று நடத்த அறிஞர் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே இந்தக் குழுக்கள் செயல்களில் இறங்கிவிட்டன. பல இடங்களில் வானியல் குறித்த செய்விளக்கங்கள், உரைகள், கருத்தரங்கங்கள், பள்ளிகளில் சிறார்களுக்கான வானியல் விளையாட்டுகள் என்று ஏற்கனவே களைகட்டத் தொடங்கிவிட்டது.
இலக்குகள்
1. அறிவியல் ஆய்வு முடிவுகளைப் பலரும் புரிந்துகொள்ளும் முறையில் பரப்புவதந் மூலம் அடிப்படை அறிவியல், குறிப்பாக வானியல், குறித்த பிரக்ஞையை பொதுமக்களிடையே வளர்த்தல். தீர்க்கமான சிந்தனைகள் எப்படி இந்த அற்புத அடிப்படைப் புரிதல்களை நமக்குத் தருகின்றன என்று புரியவைத்தல்.
2. வானியல் குறித்த அற்புதங்களை விளக்குவதன் மூலமும், வானத்தை உற்றுநோக்கல் மூலம் அடையும் உன்னத உணர்வை முன்வைத்தும் அடிப்படை அறிவியல் தரும் பொதுப் புரிதல்களை பொதுமக்களிடையே விளக்குதல்
3. வளர்ந்து வரும் நாடுகளின் வானியல் ஆராய்ச்சிகளைப் பன்னாட்டு அறிவியல் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் பலப்படுத்தல்
4. பள்ளிகளின் முறைசார்ந்த மற்றும் முறைசாரா அறிவியல் கல்வியை மேம்படுத்த உதவுதல்; கோளரங்கங்கள் அருங்காட்சியங்கள் வழியே அறிவியல் கல்விக்கு உதவுதல்.
5. தற்கால அறிவியல் மற்றும் அறிவியலாளர்கள் குறித்த முறையான பிம்பங்களை மாணவர்களிடையே வளர்த்தல், அதன் வழியே அறிவியல் கல்வியிலும் அறிவியலிலும் ஆர்வத்தைப் பெருக்குதல், வாழும்வரை அறிதலின் ஆனந்தத்தை விதைத்தல்.
6. பொழுதுபோக்கு வானியலாளர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், தகவல் தொடர்பாளர்களுக்கிடையே இருக்கும் பரஸ்பர நெருக்கத்தை மேம்படுத்தல், புதிய தொடர்புகளை உருவாக்குதல். உள்ளூர், பிராந்திய, தேசிய, பன்னாட்டு மட்டங்களில் புதிய வலையமைப்புகளை உருவாக்குதல்
7. அறிவியலில் எல்லா மட்டங்களிலும் இருபாலர்களின் பங்களிப்புகளை சமனாக்குதல்; வாய்ப்பற்ற சிறுபான்மையினருக்கு அறிவியல் மற்றும் நுட்பத் துறைகளில் வாய்ப்புகளை உருவாக்குதல்
8. மாசற்ற, இருண்ட வானத்தின் முக்கியத்தையும், பாரம்பரிய, கலாச்சார வானியல் தலங்களின் முக்கியத்துவத்தையும் குறித்த விழிப்புணர்வை வளர்த்தல்.
2009 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்
வானியல் ஆண்டு ஏன் குறிப்பாக இந்த ஆண்டில் கொண்டாடப்பட வேண்டும்?
ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுனெஸ்கோ ஒவ்வொரு ஆண்டையும் ஒரு குறிப்பிட துறைசார்ந்த ஆண்டாக அறிவித்துக் கொண்டாடுகிறது. இவற்றின் நோக்கம் கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் பரஸ்பர புரிந்துணர்வுகளை உருவாக்குவது, குறிப்பாக வளரும் நாடுகளுக்கிடையே கொண்டாடப்படும் துறையைச் சார்ந்த ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது. கொண்டாட்டங்களுக்குப் பிறகும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது, அதற்கான நிதித்திட்டங்களை உறுதி செய்வது யுனெஸ்கோவின் வழக்கம். எனவே கொண்டாட்டத்திற்காகத் தேர்தெடுக்கும் பொழுது அதன் முக்கியத்துவம் பெரிதும் ஆராயப்படுகிறது.
சரியாக 400 ஆண்டுகளுக்கு முன்னால் கலீலியோ தொலைநோக்கியின் உதவி கொண்டு வானத்தை ஆராய்ந்தார். அவருடைய உற்றுநோக்கல்கள் இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்த நம்முடைய தற்கால நவீன புரிந்தல்களின் முன்னோடி என அறியப்படுகிறது. அறிவியலும் கற்பனையும், கதைகளுமாக பிரிக்க முடியாமல் பிணைந்திருந்த பண்டைய வானியலிலிருந்து திரமான அறிவியல் கட்டமைப்புகள் மீதான நவின வானியல் கட்டியெழுப்பப்பட்டது. கலீலியோவின் அந்த அற்புதக் கண்டுபிடிப்பைக் கொண்டாடவும், நவீன வானியலை முன்னெடுத்துச் செல்லவும் 2009 ஆம் ஆண்டு உலக வானியல் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலீலியோவின் தாயகமான இத்தாலி முன்னின்று இதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகளில் முன்வைத்தது. விவாதங்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுமனதாக அதை ஏற்றுக்கொண்டது.
தமிழில் இந்தக் கொண்ட்டாடங்களை முன்னின்று நடத்த ariviyal.info தளம் பல புதிய திட்டங்களை விரைவில் அறிவிக்கும்.

