- 1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
- 1810 - கரிபியன் தீவுகளான குவாட்லூப் (Guadeloupe) பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
- 1859 - கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1899 - பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
- 1932 - இரண்டாம் உலகப் போர்: சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் பிடித்தது.
- 1936 - முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.
- 1948 - இலங்கை பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1966 - ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
- 1969 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
- 1976 - குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
- 1998 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக "சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ" எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- பிறப்புகள்
- 1921 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் ஜனாதிபதி (இ. 2005)
- இறப்புகள்
- 1747 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680)
- 1974 - சத்தியேந்திரா போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1894)
No comments:
Post a Comment