- 1820 - எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் அண்டார்டிக்காவில் தரையிறங்கினார்.
- 1835 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.
- 1930 - உலகின் முதலாவது radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.
- 1933 - அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால்கொல்லப்பட்டனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத்நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1948 - இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சேயினால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
- 1964 - தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1972 - வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர்,பிரிட்டிஷ் துணை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1972 - பாகிஸ்தான் காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகியது.
- 1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
- 1994 - பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
- 2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - பெல்ஜியம் ஓரின சேர்க்கையாளர்களுக்கான திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.
பிறப்புகள்
- 1882 - பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1945)
- 1910 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
இறப்புகள்
- 1948 - மகாத்மா காந்தி, (பி. 1869)
- 1948 - ஓர்வில் ரைட், அமெரிக்காவின் வானூர்தி நிபுணர் (பி. 1871)
- 1969 - Georges Pire, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- 2007 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)
No comments:
Post a Comment