- 1610 - கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
- 1847 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
- 1915 - இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
- 1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
- 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் பரிணாம கொள்கையை (theory of Evolution) ஏற்றுக் கொண்டது.
- 1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1953 - யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தெரிவு செய்யப்பட்டார்.
- 1964 - கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1972 - கானாவில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, இக்நாஸியஸ் குட்டு அசெயம்போங், ஆட்சியை கைபற்றினார்.
- 1982 - வாஷிங்டன், டிசியில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
- 1985 - எதியோப்பியாவில் பயணிகள் இரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.
- 1991 - சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
- 1992 - இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.
- 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
பிறப்புகள்
- 1927 - சிட்னி பிரென்னர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
- 1949 - ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.
No comments:
Post a Comment