- 1908 - முதற்தடவையாக தொலை தூர வானொலி செய்தி, ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
- 1915 - அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
- 1918 - பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாஜிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில்ஆரம்பித்தது.
- 1964 - கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்ஸானியா நாட்டை சேர்ந்த ஸான்ஸிபாரின் புரட்சிவாதிகள்,ஸான்ஸிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
- 1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
- 1970 - நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1976 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
- 1992 - மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
- 2004 - உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
- 2005 - புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்குஅப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
- 2006 - சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - மாக்னாட் வால் நட்சத்திரம், பூமியின் சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம் ஆகியது
பிறப்புகள்
- 1863 - சுவாமி விவேகானந்தர் (இ. 1902)
- 1899 - போல் ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
- 1917 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகவாதி (இ. 2008)
- 1960 - டாமினீக் வில்கின்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
- 1972 - பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி
இறப்புகள்
- 1976 - அகதா கிறிஸ்டி, ஆங்கில எழுத்தாளர் (பி. 1890)
- 1997 - சார்ல்ஸ் ஹக்கின்ஸ், நோபல் பரிசு பெற்ற கனடிய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் (பி. 1901)
- 2000 - வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல் தலைவர் (பி. 1920
சிறப்பு நாள்
- தான்சானியா: சான்சிபார் புரட்சி நாள் (1964)
- இந்தியா: தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு)
No comments:
Post a Comment