- 1806 - கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரிட்டனிடம் சரணடைந்தனர்.
- 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
- 1840 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
- 1863 - உலகின் மிகப் பழமையான சுரங்க தொடருந்து பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
- 1920 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1924 - பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
- 1946 - லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
- 1957 - பிரிட்டனின் சர் அன்டேனி எடெனின் திடீர் பதவி விலகலை தொடர்ந்து , ஹெரல்ட் மேக்மில்லன் பிரதமராக பதவி ஏற்றார்.
- 1962 - பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கைகாவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
- 1984 - 117 ஆண்டுகளின் பின்னர் வாட்டிகனும், அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
- 1989 - கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
- 1995 - உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.
- 1996 - ஜோர்டானின் மன்னர் ஹுசேன், இஸ்ரேலுக்கு சென்று பிரதமர் ஷிமேன் பேர்ஸ்யை சந்தித்தார் .
பிறப்புகள்
- 1869 - கிரிகோரி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு (இ. 1916)
- 1883 - டால்ஸ்டாய், ருஷ்ய எழுத்தாளர் (இ. 1945)
- 1916 - சூன் பேர்க்ஸ்ட்ரொம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2004)
- 1936 - ராபர்ட் வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1974 - ஹிருத்திக் ரோஷன், இந்திய நடிகர்
[தொகு]இறப்புகள்
- 1761 - ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
- 1778 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. 1707)
- 1904 - ஜீன் லியோன் ஜேர்மி, பிரெஞ்சு ஓவியர், சிற்பர் (பி. 1824)
- 1951 - சின்கிளயர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)
- 1986 - யாரொஸ்லாவ் செய்ஃபேர்ட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1901)
- 1997 - அலெக்சாண்டர் ரொட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)
- 2006 - ஆர். எஸ். மனோகர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
- 2008 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்
No comments:
Post a Comment