- 1431 - ஜோன் ஆஃப் ஆர்க் மீதான விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
- 1707 - ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது..
- 1768 - பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸை லண்டனில் நடத்தினார்.
- 1788 - கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
- 1793 - ஜான் பியர் பிளன்சார் பலூனில் பறந்த முதல் அமெரிக்கர் ஆனார்.
- 1816 - ஹம்பரி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.
- 1857 - கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது .
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து 2வது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.
- 1878 - இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினான்.
- 1905 - ரஷ்யத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றனர் (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 ரஷ்யப் புரட்சிஆரம்பமாவதற்கு வழிகோலியது.
- 1921 - புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
- 1951 - ஐநாவின் தலைமையகம் நியூயார்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
- 1964 - மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் போர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.
- 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.
- 1986 - பொலராயிட் உடன் காப்புரிமப் பிரச்சினை முறிவடைந்ததைத் தொடர்ந்து கொடாக் நிறுவனம் Instant camera தயாரித்தலை நிறுத்தியது.
- 1990 - நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.
- 1991 - லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியூஸ் நகரை முற்றுகையிட்டது.
- 2001 - சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.
- 2005 - சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில்கையெழுத்திடப்பட்டது.
- 2005 - பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் முகம்து அப்பாஸ் , வெற்றி அடைந்தார்
பிறப்புகள்
- 1868 - சோரென்சென், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1939)
- 1908 - சிமோன் ட பொவார், பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர் (இ. 19886)
- 1913 - ரிச்சர்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1994)
- 1922 - ஹார் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர்
- 1934 - மகேந்திர கபூர், இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2008)
- 1959 - ரிகொபேர்ட்டா மென்ச்சு, நோபல் பரிசு பெற்ற கௌதமாலா எழுத்தாளர்
- 1989 - மைக்கல் பீஸ்லி, அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
இறப்புகள்
No comments:
Post a Comment