1867 - வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1889 - ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.
1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1916 - முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
1926 - அப்துல்-அஜீஷ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
1959 - பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1962 - லியர்டோ த வின்சியின் , புகழ் பெற்ற "மோனலிஸா" ஓவியம் , வாஷிங்டனில் முதல் முறையாக பார்வைக்கு வைக்கப்பட்டது
1973 - வாட்டர் கேட் ஊழல்: விசாரணை தொடங்கியது
1994 - ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
1995 - தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.
பிறப்புகள்
- 1867 - எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
- 1891 - வால்தர் போத், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1957)
- 1899 - எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959)
- 1935 - எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977)
- 1942 - ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்
- 1942 - ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர்
- 1976 - பிரெட் லீ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
இறப்புகள்
- 1932 -மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)
- 1642 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)
- 1941 - பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)
- 1997 - மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1911)
- 2002 - அலெக்சாண்டர் புரோகோரொவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்யர் (பி. 1916)
No comments:
Post a Comment