- 1795 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
- 1839 - யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற போரில் சிலி வெற்றி பெற்றது.
- 1841 - ஹாங்காங் தீவு , பிரிட்டனால் கைப்பற்றப்பட்டது.
- 1887 - பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
- 1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1936 - எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.
- 1929 - வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரிட்டனின் ராயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 டன் குண்டுகளை வீசினர்.
- 1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
- 1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.
- 1981 - ரொனால்ட் ரீகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
- 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
- 1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதிமுஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
- 1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்
Tuesday, January 20, 2009
வரலாற்றில் இன்று ஜனவரி 20
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment